வாலிபரை தாக்கியவர் கைது

ராணிப்பேட்டை அருகே வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-04 23:37 IST

ராணிப்பேட்டை அருகே உள்ள புதிய அக்ராவரத்தை சேர்ந்தவர் உமாநாத் (வயது 32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தயாளன் (38) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது உமாநாத், தயாளனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உமாநாத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்