சிறுமி கடத்தல் வழக்கில் அடைக்கலம் கொடுத்தவர் கைது

ஓமலூர் அருகே சிறுமி கடத்தல் வழக்கில் அடைக்கலம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-09-11 01:31 IST

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த பஞ்சுகாளிப்பட்டி புதூர் மாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). இவர் பஞ்சு காளிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி அவர் வேலை பார்த்து வந்த தறி உரிமையாளரின் 2-வது மகளான 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார்.

இது குறித்து ஓமலூர் போலீசில் அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடுத்த 2 நாட்களில் அந்த சிறுமியை மீட்டனர். அதே நேரத்தில் மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் ஜூன் மாதம் 16-ந் தேதி அந்த சிறுமியின் அக்காளிடம் ஆசை வார்த்தை கூறி மணிகண்டன் கடத்தி சென்று விட்டார். இதையடுத்து போலீசார் ஏற்கனவே மீட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது பஞ்சுகாளிப்பட்டி சேமிக்காடு பகுதி சேர்ந்த குமார் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஓமலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்