செல்போன் திருட முயன்றவர் கைது

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-02 01:25 IST

நெல்லை அருகே உள்ள மேல கருங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய உறவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக கருப்பசாமி இருந்து வந்தார். நேற்று முன்தினம் திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த செல்லத்துரை (47) என்பவர், கருப்பசாமியின் செல்போனை திருட முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்குப்பதிவு செய்து, செல்லத்துரையை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்