வாறுகால் பணிக்கு தோண்டிய இடத்தில் திடீரென இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவர்
பாவூர்சத்திரத்தில் வாறுகால் பணிக்கு தோண்டிய இடத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் - செட்டியூர் ரோட்டில் கல்லூரணி பஞ்சாயத்து சார்பில் வாறுகால் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் 10 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது வரை பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த இடத்தில் உள்ள மூன்று வீடுகளில் பின்புற காம்பவுண்டு சுவர் டமால் என்ற சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் இதுபற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் கூறுகையில், "வீட்டின் சுற்றுச்சுவரை முன்பு இருந்தது போல் பஞ்சாயத்து நிர்வாகம் கட்டித் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.