செல்போன் டவரில் மின்சாதன பொருட்கள் திருட்டு

செல்போன் டவரில் மின்சாதன பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-10-05 00:25 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தில் செல்போன் டவர் உள்ளது. இதன் மேற்பார்வையாளராக பிரபாகரன் (வயது 40) என்பவர் உள்ளார். நேற்று அதிகாலை செல்போன் டவர் ஆப் ஆனதால் பிரபாகரன், பொறியாளர் வெங்கடேசன் மற்றும் டெக்னீசியன் மணிகண்டன் ஆகியோரை அழைத்து கொண்டு அங்கு சென்று பார்த்தார். அப்போது ெசல்போன் டவரில் இருந்த மின்சாதன பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்