வீட்டில் நகை- பணம் திருட்டு
நெல்லை அருகே வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.;
நெல்லை அருகே தாழையூத்து கீழதென்கலம் பகுதியை சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் மீனா தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மீனா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மீனா தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.