தேனி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தடை

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-25 10:15 GMT

தேனி: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தடை

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தேனியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ள வனத்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்