போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

நடன நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-09-21 23:40 IST

நடன நிகழ்ச்சி

நாட்டறம்பள்ளி ஒன்றியம் மல்லப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியூர் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சிலை வைத்து தொடர்ந்து 3 நாட்களாக பூஜைசெய்து வந்தனர். நேற்று முன்தினம் விநாயகர் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று ஏரியில் கரைத்தனர்.

மேலும் விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் வருகிற 23-ந்் தேதி ஏரியூர் பகுதியில் நடன நிகழ்ச்சி நடத்திக்கொள்ள வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அனுமதி வழங்கியுள்ளார். இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் தனிநபர் ஒருவர் 23-ந் தேதி நடன நிகழ்ச்சி நடத்தக்கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸ் நிலையத்தில் திரண்டனர்

இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், ஊர்கவுண்டர்கள் அன்புமணி, குடிய கவுண்டர் ஆகியோர் தலைமையில் நேற்று மாலை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது நாளை (இன்று) இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்