நிதியமைச்சர் கார் மீது காலணி வீச்சு: பாஜகவினரை கண்டித்து திமுக போராட்டம்- அண்ணாமலை படம் எரிப்பு

பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Update: 2022-08-14 03:50 GMT

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 6 பேரும் தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் போற்றம்பள்ளி சாலையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை முத்துநகர் பேருந்து நிலையத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்