மீண்டும் டிக் டாக்-கால் நடந்த விபரீதம்; வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் - சென்னையில் அதிர்ச்சி

டிக் டாக் தகராறு காரணமாக வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-10 10:18 GMT

சென்னை,

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் டிக் டாக்-கில் பிரபலமாக பல வீடியோக்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது நண்பருடன் அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சஞ்சயை வழிமறித்த கும்பல் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சய் கீழ்பாக்கம் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் டிக் டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்வதில் சஞ்சய்க்கும் அந்த கும்பலுக்கு தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விக்னேஷ்வரன், குணசேகரன் மற்றும் பள்ளி மாணவர் உட்பட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்