வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு

பழனி பகுதியில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்தது.;

Update:2022-10-13 00:15 IST

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு விளைகிற காய்கறிகள் பழனி, ஒட்டன்சத்திரத்தில் உள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பழனி பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி விலை உயர்ந்து, சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது.


இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. அதனால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. எனவே போதிய அளவில் தக்காளி வரத்து இல்லை. அதேவேளையில் அதன் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தக்காளி வரத்து குறையும் என்பதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்