திருவள்ளுவர் சிலையை பார்வையிட 5 மாதங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி காரணமாக வரும் 5 மாதங்களுக்கு சிலையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-06 14:40 GMT

கோப்புப்படம்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு 1 கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டு பின்னர் காகிதக்கூழ் கொண்டு சிலையில் படிந்துள்ள உப்புக்கரிசல் நீக்கப்படுகிறது. பின்னர் ஜெர்மன் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது.

இந்த பணியால் இன்று முதல் வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லையென்று சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்