மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கொள்ளிடம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்;
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பட்டியமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த டிராக்டரை வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டிவந்த டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதையடுத்து போலீசார் டிராக்டரை சோதனை செய்ததில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலுடம் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.