வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-02-19 00:15 IST
வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமம் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் விவசாயி பூலையாத்தேவர். இவருடைய மகன் கொம்பையா (வயது 42). இவர் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். தற்போது ஊருக்கு வந்த இவர் தினமும் மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் அவருடைய மனைவி பால்மணி எழுந்த போது, தூக்கில் பிணமாக தொங்கிய கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொம்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொம்பையாவிற்கு ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, லட்சுமி என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்