சங்கரன்கோவிலில் காய்கறி கடைகளை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

சங்கரன்கோவிலில் காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-06-08 16:15 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் கட்டப்பட இருக்கும் பஸ்நிலையம் மற்றும் காய்கறிக்கடை சம்பந்தமான நகராட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகரசபை தலைவி உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வியாபாரிகள் பேசுகையில், "திருவேங்கடம் சாலையில் உள்ள புதிய பஸ்நிலையத்தை செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தற்போது இருக்கக்கூடிய பஸ் நிலையமும் செயல்பட வேண்டும். காய்கறி கடைகளையும் மாற்றக்கூடாது, என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன், துணை தலைவர் கண்ணன், நகராட்சி என்ஜினீயர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலசந்தர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காய்கறிக்கடை நடத்தி வரும் வியாபாரிகள் கூறுகையில், "காய்கறி கடையை மாற்ற முயற்சித்தால் கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்