தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் - தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-05-24 14:18 GMT

சென்னை,

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு அதிகாரிகளுக்கு கூடுதலாக பொறுப்புகள் வழங்கி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் தலைமை செயல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலை வாய்ப்பு பாதுகாப்புத் திட்ட அதிகாரியாக செயல்பட்டு வந்த சித்ரா விஜயன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் துணைச் செயலர் பிரதாப்புக்கு, தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்புத் திட்ட அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரேயா பி.சிங்கிற்கு, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் இயக்குநர் என்ற கூடுதல் பொறுப்பை வழங்கி தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்