மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடந்தது.;

Update:2023-06-06 00:30 IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவேங்கடம் பிள்ளை பூங்காவில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நகராட்சி ஆணையர் வாசுதேவன் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து குளக்கரை முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதே போல் அரியபிள்ளை குளம், காந்தி பூங்கா குளம், அய்யனார் கோவில் குளம் உள்ளிட்ட குளங்களின் கரையோரம் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, அலுவலர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்