மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.;

Update:2023-06-11 00:45 IST

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மூலம் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலைத்துறை திருக்குவளை பிரிவுக்குட்பட்ட வேளாங்கண்ணி - வேதாரண்யம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். கோவில்பத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் சாலை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்