பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2023-09-09 01:02 IST

களக்காடு:

குமரி மாவட்டம் பால்குளம் அருகே உள்ள கூந்தகுழியை சேர்ந்தவர் சுபின் (வயது 32). இவர் களக்காடு பகுதியை ஒரு வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சத்தம் போட முயன்றார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு சுபின் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்