கல்வராயன்மலை ஒன்றியக்குழு கூட்டம்

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிமலையில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் நடந்தது

Update: 2022-11-24 18:45 GMT


கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிமலையில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாட்ஷா பி ஜாகிர் உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய உதவி பொறியாளர் அருண்ராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளிலும் மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சாலை, குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை செய்ய முன்னுரிமை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நடப்பாண்டுக்கான வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கல்வராயன்மலை ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், செல்லதுரை, மின்னல்கொடி சக்திவேல், மலர் ராஜ்குமார், பார்வதி அண்ணாமலை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்