கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-09-23 19:50 GMT

கம்மாபுரம், 

கம்மாபுரம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு சரியாக பணிகள் வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக குழாய்கள் அமைக்க வேண்டும். அம்மன் கோவில் தெருவில் 75 குடும்பத்தினர் கடந்த 12 ஆண்டுகளாக சரிவர குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஒன்றிய, மாவட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கலைச்செல்வன் தலைமையில் கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) குமரனிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்