தேனியில் விதி மீறல்: 14 ஆட்டோக்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்

தேனியில் விதிகளை மீறிய 14 ஆட்டோக்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-07-23 14:08 GMT

தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெட்சணாமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பிளாஸ்டிக் குழாய்கள், குடிநீர் தொட்டி ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் போல் வந்த பயணிகள் ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அந்த ஆட்டோ டிரைவருக்கு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ரூ.4,100 அபராதம் விதித்தனர். அதுபோல் நேற்று ஒரே நாளில் அதிக ஆட்கள் ஏற்றியது, ஆவணங்கள் இன்றி ஆட்டோ ஓட்டியது போன்ற விதிமீறல்கள் காரணமாக 14 ஆட்டோக்களின் டிரைவர்களுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்