பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணையில் விசாகா கமிட்டி விசாரணை

பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணையில் பாலியல் புகார் குறித்து, விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.;

Update:2023-03-03 00:15 IST

பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணையில் பாலியல் புகார் குறித்து, விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.

ஆவின் பால் பண்ணை

கோவை - சிறுவாணி ரோடு பச்சாபாளையத்தில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதில் குறிப்பாக, 60-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள், ஷிப்டு முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், இங்கு வேலை பார்க்கும் பெண்கள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆவின் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாகா கமிட்டி விசாரணை

இந்த நிலையில் பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணையில் நடந்த பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. 4 பேர் கொண்ட அந்த விசாகா கமிட்டியினர் நேற்று கோவைக்கு வந்தனர்.

அவர்கள் கோவை-சிறுவாணி ரோட்டில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு சென்று அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர் கள் மற்றும் ஆவின் பால் முகவர்கள் உள்ளிட்டோரிடம், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

பரபரப்பு

இதேபோல் தற்காலிக ஆவின் பெண் ஊழியர்களிடம் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் புகார் தொடர்பாக விசாகா கமிட்டியினர் விசாரணை நடத்தியது ஆவின் பால் பண்ணை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்