குளிர்பானம் குடித்த பெண்ணுக்கு வாந்தி, மயக்கம்

பல்லி இறந்து கிடந்தது தெரியாமல் குளிர்பானம் குடித்த பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2022-06-13 17:50 GMT

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஜார் வீதியில் வசிக்கும் விஜயரங்கன் பேத்தி அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் அந்தக் குளிர்பானத்தை பார்த்தபோது, அதில் ஒரு பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு, நான் அந்தப் பொருளை வாங்கி விற்கிறேன். ஆனால் அதற்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எனத் தெரிவித்தார். அந்தக் குளிர்பான நிறுவனத்தின் உரிமையாளர் மீதும், விற்பனையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்