நாகை மாவட்டத்தில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 319 வாக்காளர்கள்

நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களேஅதிகம் உள்ளனர்.

Update: 2022-11-09 19:00 GMT

நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களேஅதிகம் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

நாகை மாவட்டத்தில் 2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண் தம்புராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும்போது கூறியதாவது:-

இந்த வரைவு வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன.

நாகை-கீழ்வேளூர்

நாகை சட்டசபை தொகுதியில் 91,673 ஆண் வாக்காளர்களும், 97,510 பெண் வாக்காளர்களும் 20 மூன்றாம் பாலினத்தவரும் என 1 லட்சத்து 89 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர்.

கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் 84,900 ஆண் வாக்காளர்களும், 88,671 பெண் வாக்காளர்களும் 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என 1 லட்சத்து 73 ஆயிரத்து 573 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 92,674 ஆண் வாக்காளர்களும், 95,869 பெண் வாக்காளர்களும் என 1 லட்சத்து 88 ஆயிரத்து 543 பேர் உள்ளனர். மாவட்ட முழுவதும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 247 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 82 ஆயிரத்து 50 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 லட்சத்து 51 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறப்பு முகாம்

மேலும், 2023 ஜனவரி 1-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திட 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா அவர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தேர்தல் தாசில்தார் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்