"ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல" - சென்னை உயர்நீதிமன்றம்

டூ கே கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

Update: 2024-01-12 13:49 GMT

சென்னை, 

சென்னை உயர்நீதிமன்றத்தில், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக கூறி தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், இளைஞர் ஆபாச படங்கள் பார்த்ததாகவும், ஆனால் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,

90களில் பிறந்த இளைஞர்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதைப்போலவே டூ கே கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதிலாக, இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கும் அளவிற்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிகளில் இருந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் எனக்கூறி அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்