மருதமலை மலைப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானை: மக்கள் அச்சம்

மருதமலை மலைப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானையை, பக்தர்கள் ஒலி எழுப்பி வனப்பகுதிக்கு விரட்டினர்.

Update: 2023-02-11 17:19 GMT

கோவை,

மாவட்டம், மருதமலை கோவில் அடிவாரத்தில் வலம்வரும் காட்டு யானையால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோவில் அடிவாரத்தில், பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி சுற்றி வருகின்றன.

இந்நிலையில், மருதமலை மலைப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானையை, பக்தர்கள் ஒலி எழுப்பி வனப்பகுதிக்கு விரட்டினர். இதனிடையே,யானை கூட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

 

Tags:    

மேலும் செய்திகள்