மாரியம்மன் கோவிலில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்

ஏலகிரியில் மாரியம்மன் கோவிலில் பெண் மாவிளக்கு ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-06-24 16:55 GMT

ஏலகிரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சக்தி கரகம் அழைத்தல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று 1,000 பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. முக்கிய கிராமங்கள் வழியாக மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் நடந்த இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி வந்தனர். இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அங்கு அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்