தாலி கயிறுடன் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் - தஞ்சையில் பரபரப்பு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் தாலி கயிறுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-07-24 23:19 IST

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியக்குடி மேலத்தோப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதுடன், பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் கடையை மூடக்கோரி தாலி கயிறுடன் ஏராளமான பெண்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கடையை அகற்றவில்லையென்றால் தீ குளிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்