விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை;

Update:2022-05-27 20:18 IST

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்பிரிவு சிந்துநகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது 59). தொழிலாளி. இவருடைய மனைவி இந்திராணி. இவர்களது மகன் அருண்குமார். இந்த நிலையில் வேலுச்சாமி கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் மகனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இது தவிர கடன் தொல்லையும் இருந்தது.

சரிவர ேவலை கிடைக்காமலும், சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேலுச்சாமி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்