தொழிலாளி தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-04-15 20:00 IST

நெய்க்காரப்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 45). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கலைவாணி (30). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் சின்னத்துரை மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து சின்னத்துரை தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சின்னத்துரையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்