விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-20 18:45 GMT

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் சேமிப்பு கிடங்கு முன்பு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு), டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுபான பெட்டிகளுக்கான இறக்குக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், ஏற்றுக்கூலியை அனைத்து குடோன்களிலும் ஒரே மாதிரி நிரந்தர கூலியாக ரூ.3.50 வழங்குவதற்கு டெண்டர் பாரத்திலேயே அறிவிக்க வேண்டும், அனைத்து டாஸ்மாக் குடோன்களிலும் பணி செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் அவர்களது ஊதியத்திலிருந்து லட்சக்கணக்கான பணம் டாஸ்மாக் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறது, இதை டாஸ்மாக் நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட தலைவர்கள் குமார், பழனி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சங்க பொருளாளர் அய்யப்பன், நிர்வாகிகள் கலைமணி, கங்காதுரை உள்பட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்