கடலூர் அரசு கல்லூரியில் தமிழ்க்குறுஞ்செயலி உருவாக்கம் குறித்த பயிலரங்கு
கடலூர் அரசு கல்லூரியில் தமிழ்க்குறுஞ்செயலி உருவாக்கம் குறித்த பயிலரங்கு நடைபெற்றது.;
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் கணித்தமிழ் பேரவை சார்பில் தமிழ்க்குறுஞ்செயலி உருவாக்கம் குறித்த பயிலரங்கு நடந்தது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஏழுமலை வரவேற்றார். இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சாந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கீதா முன்னிலை வகித்தார். பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் இ.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு குறுஞ்செயலி மற்றும் அதன் வகைகள் குறித்தும், செல்போனில் இயங்கு தளங்கள் குறித்தும், ஆன்ட்ராய்டு குறுஞ்செயலி உருவாக்கம் குறித்தும் பேசினார். இதில் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் காணொலி தொடர்பியல் துறைத்தலைவர் வீனஸ் நன்றி கூறினார்.