எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.;

Update:2023-08-12 23:28 IST

ஆரணி

எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா சங்கத் தலைவர் இல.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. சங்க முன்னாள் தலைவர்கள் எம்.பழனி, கே.அண்ணாதுரை, அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எம்.ஆனந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் சாசன தலைவர் ஜி. கண்ணாயிரம், டாக்டர் வி.தியாகராஜன், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அபிராமி ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினர்.

நிகழ்ச்சியில் 25 தாய்மார்களுக்கு உட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டன. சங்க பொருளாளர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்