அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய் பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-06 20:17 GMT

அரக்கோணம்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய் பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.பி.ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் டாக்டர். ரெஜினா மற்றும் டாக்டர். பிரபு ஆகியோர் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு சிறப்புரையாற்றினர். அப்போது அவர்கள் பேசுகையில், ''தாய் பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு இது காரணமாகிறது. தாய் பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகு மன சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களை பாதுகாக்கிறது'' என கூறினர்.

இதனையொட்டி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் இளங்கோ, வர்தமான் ஜூவல்லர்ஸ் மான்மல், டி.கே.என்.மளிகை கமலக்கண்ணன், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன், ஸ்ரீ ராம் டிரேடர்ஸ் சிவசுப்பிரமணிய ராஜா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆலோசகர் ஜி.மணி, முன்னாள் ரோட்டரி துணை ஆளுனர் டி.எஸ்.ரவிகுமார், பல்ஸ் போலியோ திட்ட சேர்மன் வெங்கடரமணன், கே.பி.கே.பிரபாகரன், பி.ஆர்.முரளி மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்