உலக சுற்றுச்சூழல் தினம்

அய்யம்பேட்டைசேரி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் நடந்தது.

Update: 2022-06-24 11:02 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த அய்யம்பேட்டை சேரி ஊராட்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கல்பனா சங்கர் அறிவுறுத்தலின்படி, தலைமை செயல்பாட்டு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் துணை பொது மேலாளர் பிரபாகரன் மற்றும் முதன்மை பொது மேலாளர் மோசஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி உலக சுற்றுச்சூழல் தினம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ஜெய்சங்கர், சமூக ஒருங்கிணைப்பு மேலாளர் நடராஜன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜி, துணைத்தலைவர் டில்லி பாபு, ஒன்றியக் குழு உறுப்பினர் யுவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வஜ்ஜிரவேல், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் ரகு, ஊராட்சி செயலாளர் ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சுற்றுச் சூழல் தின உறுதிமொழி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணர்வு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. உதவி மண்டல பயிற்சியாளர் சவுமியா செழியன் நன்றி கூறினார். ரேவதி ராஜேஷ் மற்றும் அனுப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்