பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை: தமிழக கடலோர காவல் படை போலீசாருக்கு மநீம பாராட்டு

பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை படைத்துள்ள தமிழக கடலோர காவல் படை போலீசாருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-08-05 09:49 GMT

சென்னை,

பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை படைத்துள்ள தமிழக கடலோர காவல் படை போலீசாருக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மரப் படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று, மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இப்பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழ்நாடு காவல் துறையை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. கடலோரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் பணியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்