கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.;

Update:2022-06-17 23:38 IST


சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள கருமான் பிள்ளையார் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. அதையொட்டி கருமான் பிள்ளையாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், விபூதி ஆகிய நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு பலவண்ணமலர் மாலைகள், அருகம்புல் மாலை ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்