மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தீபாவளி செலவுக்காக மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-22 18:45 GMT


காங்கேயம் அருகே கடையூரை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிச்சாமி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்று விட்டனர்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மாதவன் நகரை சேர்ந்த நிகில் அருண்குமார் (வயது 20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக சாம் பிரவீன் (வயது 19) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளி செலவுக்காக மோட்டார் சைக்கிள்திருடியது விசாரணை யில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்