நகை திருடிய வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

நகை திருடிய வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update:2023-03-21 00:13 IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலத்தை சேர்ந்த பழனியாண்டியின் மகள் ராணி. இவரது வீட்டில் இருந்த நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் டி.களத்தூர் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் களரம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த நாகராஜின் மகன் சந்துரு (வயது 24) என்பதும், அவர் தான் ராணியின் வீட்டில் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சந்துருவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1¼ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த பாடாலூர் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்