கருணாநிதிக்கு சிலை வைக்கக்கோரி வாலிபர் மவுன போராட்டம்

திண்டுக்கல்லில் கருணாநிதிக்கு சிலை வைக்கக்கோரி வாலிபர் மவுன போராட்டம் நடத்தினார்.;

Update:2023-09-23 06:45 IST

திண்டுக்கல்லை அடுத்த தீத்தாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 30). இவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் சிலை வைக்கக்கோரி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று திடீரென மவுன போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சிலை வைக்க வேண்டும் என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்தியபடி நின்றார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திய பின்னர், அங்கிருந்து சென்றார். மாநகராட்சி அலுவலகம் முன்பு வாலிபர் மவுன போராட்டம் நடத்தியது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்