4 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர் சென்னையில் மட்டும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னையில் மட்டும் 74 வயது மூதாட்டி ஒருவர் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

Update: 2021-03-03 04:25 GMT
சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 284 ஆண்கள், 178 பெண்கள் என மொத்தம் 462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 167 பேரும், கோவையில் 39 பேரும், செங்கல்பட்டில் 33 பேரும், குறைந்தபட்சமாக கரூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, தர்மபுரி, ராமநாதபுரம், விருதுநகரில் தலா இருவரும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பத்தூரில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 42 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 113 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 74 ஆண்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 369 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 31 ஆயிரத்து 259 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 535 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஒருவர் உயிரிழப்பு

கடந்த ஜனவரி 8-ந் தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 2,843 பேரில் 2 ஆயிரத்து 293 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 2,255 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 26 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் இருவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்து உள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 26-ந் தேதி கொரோனா பாதிக்கப்பட்ட 74 வயது பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரையில் 12,502 பேர் உயிரிழந்து உள்ளனர்.

473 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 473 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 178 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும், கோவையில் 39 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 979 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது தமிழகத்தில் 3 ஆயிரத்து 997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 950 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,043 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 624 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 7 ஆயிரத்து 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்