தமிழகத்தில் 2-வது கட்ட சுற்றுப்பயணம்: அமித்ஷா 7-ந் தேதி நாகர்கோவில் வருகை

மத்திய மந்திரி அமித்ஷா 7-ந் தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

Update: 2021-03-04 04:29 GMT
நாகர்கோவில், 

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷா விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக வருகிற 7-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் வந்திறங்குகிறார். அங்கு அவருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காரில் சுசீந்திரம் சென்று தாணுமாலயசாமியை தரிசனம் செய்கிறார். பின்னர் நாகர்கோவில் இந்துக்கல்லூரி அருகில் உள்ள நீலவேணி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தேர்தல் பிரசார ரோடு ஷோ நிகழ்ச்சியை தொடங்குகிறார். நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து பேசுகிறார்.

ஆலோசனை

தொடர்ந்து பொதுப்பணித்துறை அலுவலக சாலை வழியாக வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, உரையாற்றுகிறார். அதன்பிறகு வடசேரியில் உள்ள உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலில் நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கி உரையாற்றுகிறார்.

மேலும் செய்திகள்