முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்தார்.

Update: 2021-03-06 13:47 GMT
சென்னை, 

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்ற ஜி.கே.வாசன், அங்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். அதிமுக கூட்டணியில் த.மா.கா இடம்பெற்றுள்ள நிலையில் முதலமைச்சருடன் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் தாமாகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்