நாவலூர் சுங்கச்சாவடியில் சுமார் 80 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் சுங்கச்சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 80 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-03-23 11:44 GMT
செங்கல்பட்டு,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் தங்கத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை பரிசோதனை செய்தபோது அதில் சுமார் 80 கிலோ தங்கம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த தங்கம் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு கொண்டு செல்லப்பட்ட சுமார் 80 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் சென்னை தங்க நகை மாளிகையில் இருந்து செங்கல்பட்டுக்கு கொண்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு கைப்பற்றப்பட்ட தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்