"அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் நிம்மதியாக உள்ளனர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் நிம்மதியாக உள்ளனர் என்று தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-29 11:39 GMT
சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலை சுமூகமாக முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக இத்தேர்தலுடன் காணாமல் போய்விடும் என்று திமுக ஸ்டாலின் அவதூறு பிரசாரத்தை தொடர்ந்து எல்லா கூட்டத்திலும் பரப்பி வருகிறார். முக ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் என்னை பற்றிதான் பேசிவருகிறார். 

வியாபாரிகள் மகிழ்ச்சியோடு வியாபாரம் செய்துகொண்டிருக்கிறீர்கள். கட்டப்பஞ்சாயத்து தற்போது கிடையாது. அதிமுக ஆட்சியில் வியாபாரிகள் நிம்மதியாக தொழில் செய்துகொண்டிருக்கிறீர்கள். அது தொடரவேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்