தமிழகத்தில் சட்டசபை தேர்தல்: பரோட்டா செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர்

அ.தி.மு.க.வின் தாம்பரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் சின்னையா பரோட்டா செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-29 17:22 GMT
சென்னை,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ந்தேதி சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க.வின் தாம்பரம் சட்டசபை தொகுதி வேட்பாளராக டி.கே.எம். சின்னையா போட்டியிடுகிறார்.  அவர் பீர்க்கன்கரணை நகராட்சி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ஸ்ரீனிவாசா நகர் பகுதியில் திடீரென உணவகம் ஒன்றிற்குள் நுழைந்த சின்னையா பரோட்டா செய்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.  அதன்பின்னர் மறக்காமல் தங்களுடைய சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்