இலங்கையில் சர்ச்சைக்குரிய மதப் போதகர் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவியை ஒளிபரப்ப தடை

இலங்கையில் சர்ச்சைக்குரிய மதப் போதகர் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவியை ஒளிபரப்ப கேபிள் டிவி நிறுவனங்கள் தடையை விதித்துள்ளன.

Update: 2019-05-01 09:40 GMT
மும்பையில் இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேஷனை நிறுவிய சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கின், பீஸ் டிவி என்ற சர்வதேச இஸ்லாமிய தொலைக்காட்சி ஒளிபரப்பாவதை இலங்கையில் இரு கேபிள் டிவி நிறுவனங்கள் தங்களுடைய சேவையிலிருந்து டிவியை அகற்றியுள்ளன. ஈஸ்டர் தின தாக்குதலில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இச்சம்பத்தை அடுத்து இலங்கையில் கேபிள் டிவி நிறுவனங்கள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. 

2016-ம் ஆண்டு டாக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி சர்ச்சைக்குரிய மதப்போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சை கேட்டு பயங்கரவாத பாதைக்கு சென்றதாக தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்கிறது. 
அவருடைய இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேஷனுக்கு தடை விதித்துள்ளது. ஜாகீர் நாயக்கிற்கு எதிராக நடவடிக்கையை எடுக்க சர்வதேச போலீசையும் இந்தியா நாடியுள்ளது. 

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவில் உதிரிகள் யாராவது உள்ளனரா? என விசாரிக்கும் தேசிய புலனாய்வு பிரிவு ஞாயிறு அன்று கேரளாவில் ரியாஸ் என்பவரை கைது செய்தது. ரியாஸ் கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் ஜாகீர் நாயக் மற்றும் இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஜக்ரான் ஹாசிம் பேச்சுக்களை தொடர்ந்து கேட்பதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்கிறது. இந்நிலையில் பீஸ் டிவியை ஒளிபரப்பு செய்வதை இலங்கை கேபிள் டிவி நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இந்த டிவியை ஏற்கனவே இந்தியா, வங்காளதேசம் நிறுத்திவிட்டது. இருப்பினும் இலங்கை அரசாங்கம் டிவிக்கு தடை விதிக்கவில்லை.

மேலும் செய்திகள்