சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது - இந்தியா குற்றச்சாட்டு

சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது என்று இந்தியா கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.

Update: 2019-12-13 12:10 GMT
ஜெனிவா

ஐ.நா. பொதுச்சபையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டதிருத்த மசோதா குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா சார்பில் பேசும் போது ஐ.நாவுக்கான நிரந்தர  இந்திய தூதுக்குழுவின் முதன்மை செயலர் பவுலோமி திரிபாதி பேசும் போது, 

அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு ரத்து, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானின் பேச்சு, கோழிக்கூட்டுக்கு காவல் இருக்கும் நரியைப் போன்றது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருக்கிறது.சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.

மேலும் செய்திகள்