“தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை” - வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2020-06-14 12:16 GMT
பியோங்யாங்,

தென்கொரியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியா அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த  வடகொரிய அதிபரின் தங்கையும், வடகொரியாவின் சக்திவாய்ந்த தலைவர்களுள் ஒருவருமான  கிம் யோ ஜாங், தென் கொரியா மீது ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார்.

தென்கொரியா மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வடகொரிய ராணுவத்திற்கு தாம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வட கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்கள் மூலம் சில ரகசிய தகவல்களை தென்கொரியாவுக்கு சிலர் கடத்துவதாக  வடகொரியா குற்றம் சாட்டி இருந்தது.

இதனைத் தடுக்க தவறிய தென் கொரியா அரசுக்கு  தகுந்த பாடம் கற்பிக்கும் நேரம் வந்துவிட்டதாக கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தையில் தேவையில்லாமல் தலையிடுவதாக தென்கொரியாவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்